ஆவண மொழிபெயர்ப்புகள்

இலவச ஆவண மொழிபெயர்ப்புகள்

Department of Social Services (DSS) தகுதியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு ஒரு இலவச மொழிபெயர்ப்பு சேவை மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக நிலைநிறுத்த குடியேறும் தங்கள் தகுதியுள்ள தனிப்பட்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் சேவைகளை வழங்குகிறது.

தகுதியான வாடிக்கையாளர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலிய வருகையில் தகுதியுள்ள தனிப்பட்ட ஆவணங்களை இலவசமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட முடியும். இந்த சேவை விசா விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்யாது.

இலவச மொழிபெயர்ப்பு சேவை பற்றி விசாரிக்க,உங்களுடைய உள்ளூர் Adult Migrant English Program (AMEP) வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்

Adult Migrant English Program வழங்குநர்கள்

Adult Migrant English Program (AMEP) சேவை வழங்குநர்கள் விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் இலவச மொழிபெயர்ப்பு சேவைகளுக்கான தங்கள் ஆவணங்களை மதிப்பீடு செய்வர்.

AMEP பற்றி மேலும் அறிய அல்லது ஆஸ்திரேலியாவில் AMEP சேவை வழங்குநர்களின் பட்டியலை பார்க்க,  Department of Education and Training இணையத்தளம் அல்லது Skilling Australia தகவல் இணைப்பு 13 38 73 அழைக்கவும்.

இலவச உரைபெயர்ப்புச் சேவை பற்றி மேலும் தகவலை அறிய  அது  Department of Social Services இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வணிக ஆவணம் மொழிபெயர்ப்பு

TIS National வணிக ஆவண மொழிபெயர்ப்பு சேவை வழங்குவதில்லை.

நீங்கள் ஒரு வணிக மொழிபெயர்ப்பை முடிக்க வேண்டும் என்றால், National Accreditation Authority for Translating and Interpreting (NAATI) என்ற இணையத்தளம் மூலம் நீங்கள் ஒரு தகுதியான மொழிபெயர்ப்பாளரை தேடலாம்.